கருங்காட்டில் ஒரு தமிழ்கோயில்

Photo அல்ப்ஸ் மலைச்சாரலில் இயங்கும் தமிழ் ஆன்மிகப்பங்கு 15 வருட பயண நிறைவை அடைந்துள்ளது. தமிழ் நிலங்களாகிய குறிஞ்சி நிலத்தில் ஒரு தமிழ்க்கோயில்!

ஜேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் 1987 ஒஸ்னபுறுக்கில் ஸ்தாபிக்கப்பட்டு அதன் வளர்ச்சி பரவலாக்கப்பட்டது. 1988 ஜேரமனியின் தென்பகுதிக்கு ஸ்ருட்காட் தலைமையகமாய் அமைந்தது. அங்கிருந்து பணிகள் பரவலாக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அடர;ந்த கருங்காட்டின் மலைக்குன்றுகளுக்குள் சிக்குண்ட பல கிராமங்கள்! கோடையில் அடர்ந்த காட்டுக்கருமையும் பனிக்காலத்தில் பால் வெண்மையாக, வானமும் வையகமும் முகில்கள் ஊடாக ஒளித்துக்கொண்டு முத்தமிடும் காட்சிகளிக்குள் வளைந்த நெடுஞ்சாலையூடான விலிங்கன்-சுவிலிங்கன் கிராமங்களைக் கண்டுபிடித்து வழிபாடுகளைத் தொடக்கினோம். அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்துவதிலும் திருமண திருமுழுக்கு வைபவங்களில் அவர;களோடு இணைந்து அவர;களதும் அவர; நண்பர;களதும் முகவரிகளைப் பெற்று தெடர்புகளை உருவாக்கினோம். இவ்விரு கிராமங்களும் விறைபூக், றொட்டென்பூக் இருமறைமாவட்டத்திற்கு உரித்தான எல்லையில் அமைந்திருந்ததால் இரு மாவட்ட மறை ஆயர;களிடமிருந்தும் உறுதி பெற்று 1995 இல் உத்தியோகபூர;வமாக பங்கு ஆரம்பிக்கப்பட்டது. வினைத்திறன், தலைமைத்துவம, புரிந்துணர;வுப் பண்பு கொண்ட திரு. மதுரநாயகம் இப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டார். இதன் உருவாக்கத்திற்கும் தொடர்ச்சியான வளரச்சிக்கும் உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்டுவதில் நிறைவடைகிறேன்.
1980களில் குடிபுகுந்த எம் தமிழர;கள் 2ம் 3ம் தலைமுறையினரை சந்திக்கும் காலம் இது. தமிழ்மொழி தேரச்சியற்று நிறத்தாலும் பழக்கவழக்கத்தாலும் உருவஅமைப்பாலும் தமிழர;களாக இருக்கும் இத் தலைமுறையினரின் எதிர;காலம் என்ன? இந்தியாவில் நடந்து முடிந்த செம்மொழி மகாநாட்டில் புலம்பெயர;ந்த தமிழர;களில் தமிழ் அறிவு பற்றி ஒரு சில ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட்டது. தமிழ் மொழியை மறந்தாலும் தமிழ்ப் பண்பாட்டை நிலை நிறுத்தவேண்டும். அவர;களது நிறமும் உருவ அமைப்பும் புலம்பெயர; நாட்டில் வேறுபட்டவர;களாகக் காட்டும். அவரகள் தங்கள் வேர்களைத் தேடி அதன் வளங்களை வளம்படுத்த வேண்டும். தமிழ்ப்பணபாட்டின் உயர; விழுமியங்களை தாம் வாழும் சமுகத்திற்கு கொடுப்பதும் மேலும் பண்பாட்டின் தனித்துவங்களை பகிர;ந்து கொள்வதும் முக்கியமாகும். குறிப்பாக தமிழ்ப்பண்பாட்டில் பொதிந்திருக்கும் உலகளாவிய பொதுநோக்கு, திருமணவாழ்வின் அழகான கட்டமைப்பு, திருக்குறளின் சங்ககால இலக்கியங்களின் மதிப்பிPகள் வாழப்பட வேண்டியதும் பகிரப்படவேண்டியதும் ஒன்றாகும்.
எனவே தமிழ்க்கத்தோலிக்கம் தனித்துவமானது. கத்தோலிக்க மெய்மைகள் தமிழ்ப்பண்பாட்டை மெருகூட்ட வேண்டும். 4000 ஆண்டு பழவைசாய்ந்த தமிழ்ப்பண்பாட்டு உயர் விழுமியங்கள் கத்தோலிக்கத்தை வளமாக்க வேண்டும். இம் மையக்கருவில் தங்கள் ஆன்மீப்பங்கு வளர;ச்சியடைய வேண்டும். மத வேறுபாடு இன்றி அனைத்து தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து சகோதரத்துவத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர;க்கும் தளமாக இதுஅமைய வேண்டும்.
இவ் நிறைவுக் கொண்டாட்டத்தில் உளம் நிறை வாழ்த்துக்களையும் உள இருப்பையும் இத்தால் இணைத்துக்கொள்கிறேன். .

என்றும் உங்கள் அன்பின்
அ.பி யெயசேகரம்.