கருங்க்காட்டு தமிழ் கத்தோலிக்க பங்குத்த்தளத்த்தின் வரலாறு

1980களின் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களுக்கும் சென்று குடியேரத் தொடங்கினர். அம் மக்களுள் ஒரு பகுதியினர், யேர்மனி அல்ப்ஸ் மலைச்சாரலிலிலும் குடியேரினர். பச்சை மலைச்சாரலும் கருமையான ஊசியிலைக் காடுகளும் விறைக்கும் பனிக்குளிரும் நிறைந்த யேர்மன்-சுவிஸ் எல்லைப்புற நகரங்களில் தம் பெற்றோர், உற்றார், உறவுகள், நண்பர்களைப் பிரிந்து புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க மக்கள் தமக்கு தாய் மொழியில் தமது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாமலுள்ளதே என்ற ஏக்கம் பல நாட்களாக இருந்து வந்தது.

யேர்மன் ஒஸ்நாபுறுக் மறைமாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு இயக்குனர் கலாநிதி ஜெயசேகரம் அவர்களின் பொறுப்பில் 02.02.1987இல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேளையில் ஏறக்குறைய 10 தமிழ் பங்குகளே யேர்மனி முழுவதும் நிறுவப்பட்டிருந்தன. அந்நாட்களில் தமது கலாநிதிப் பட்டத்தை உரோமையில் பெற்று ஐரோப்பிய புலம்பெயர் தமிழ் மக்களுக்காக தமது பணிகளை சுறுசுறுப்புடன் முறுக்கி விட்டிருந்த கலாநிதி ஜெயசேகரம் அவர்களின் கண்களில் கருங்காட்டின் பல கிராமங்களிலும் பரந்து வாழ்ந்த எம் மக்கள் தென்படவே, இயலுமான வேளைகளில் பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள இப் பங்கிற்கு அவர் நேரடியாகச் சென்றோ அல்லது உதவிப் பணியாற்ற வரும் அருட்பணியாளர்களை அனுப்பியோ வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார்.

பணியக வளர்ச்சிப் பாதையில் மேலும் பல பங்குகள் யேர்மன் முழுவதும் நிறுவி வந்த வேளையில், சுவாட்ஸ்வால்ட்-போடன்சே எனும் இரு பிரதேசங்களும் விறைபூக், றொட்டென்பூக் எனும் இருமறைமாவட்டத்திற்கு உரித்தான எல்லையில் அமைந்திருந்ததால் இரு மாவட்ட மறை ஆயர;களிடமிருந்தும் உறுதி பெற்று 1995 இல் உத்தியோகபூர;வமாக பங்கு ஆரம்பிக்கப்பட்டது. இது கருங்காட்டுப் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டமையினால் கருங்காட்டு தமிழ் கத்தோலிக்க பங்கு எனுப் பெயரிட்டு இயக்குனர் ஜெயசேகரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் தொடர்பாளராக திரு. கிறகோரி மதுரநாயகம் அவர்களும் பங்குப் பணிகளுக்கான உதவியாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் சில குடும்பங்களே வழிபாடுகளில் பங்கேற்றிருந்த போதிலும், நாட்கள் செல்லச் செல்ல ஆலயம் நிறைந்த மக்களுடன் வழிபாடுகள் நடந்தேறுகின்றன.

இப்பணித்தளமானது, ஆரம்பகாலமுதல் தொடர்பாளராக இருந்து வரும் திரு. மதுரநாயகம் அவர்களின் அய்ராத உழைப்பினாலும், அருட் கலாநிதி ஜெயசேகரம் அவர்களை தொடர்ந்து யேர்மன் ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனராக கடைமையாற்றிய அருட்பணி.டோ.ஜே.பேனாட் றெக்னோ, அருட்பணி.யே.கு.அன்ரனி பாலா அவர்களினது வழிகாட்டுதல்களினாலும் வளர்ச்சியடைந்து, தற்போதைய இயக்குனர் அருட்பணிஅ.பெ.பெனற் அவர்களுடன் இணைந்து ஆன்மீகப்பணி ஆற்றிவருகின்றது.